மகளின் காதலை முறிக்க ஆலயத்திற்கு அழைத்து வந்த தாய்: கோயில் கதவை மூடிவிட்டு துவம்சம் செய்த அர்ச்சகர் தலைமறைவு!

Date:

மகளின் காதல் உறவை முறிப்பதற்காக இந்து ஆலயமொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட் 15 வயது சிறுமியை, இரண்டு நாட்களாக துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகர் தலைமறைவாகி விட்டார்.

குளியாபிட்டிய, போஹிங்கமுவ பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. ஆலயத்தை பூட்டி விட்டு அர்ச்சகர் மாயமாகி விட்டார்.

தனது 15 வயதான மகள், அதே வயதுடைய பையனுடன் காதல் உறவை கொண்டிருப்பதாகவும், அதனால் அவரது கல்வி சீர்குலைவதாகவும் குறிப்பிட்டு தாயாரால் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் பொலிசார் விசாரணை ஆரம்பித்த போது, சிறுமி அர்ச்சகரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

சிறுமியின் காதல் உறவை முறிப்பதற்காக, சில மாந்திரீக நடவடிக்கைகளிற்காக சிறுமியை தாயார் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.சிறுமி அர்ச்சகரின் பொறுப்பில் இருக்க, தாயார் வீடு திரும்பி விட்டார். அன்றைய தினம் சிறுமி காற்சட்டை அணிந்திருந்தார். சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகர், மறுநாள் கவுண் அணிந்த வருமாறு கூறியுள்ளார்.

மறுநாள் சிறுமி கவுண் அணிந்து சென்றார். அன்றைய தினமும் அர்ச்சகர் கைவரிசை காட்டியதுடன், மறுநாள்- 3ஆம் நாள் பூசைக்கும் வருமாறு கூறியுள்ளார்.

எனினும், 3ஆம் நாள் சிறுமி ஆலயத்திற்கு செல்ல மறுத்து விட்டார்.

சிறுமியின் காதலை முறிக்க மாந்திரீக முயற்சி வெற்றிளிக்காத நிலையில், தாயாரால் காதலன் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய அர்ச்சகர் மீது ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்