26.5 C
Jaffna
January 5, 2025
Pagetamil
மருத்துவம்

நுரையீரலை பலப்படுத்தும் செடிகள் உங்க வீட்டில் இருக்கா?..

சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து நுரையீரலை பலப்படுத்தும் செடிகள். வீட்டின் உட்புறங்களில் செடி வளர்ப்பது என்பது ஒரு கலையாகும். பலர் அழகுக்காக இந்த செடிகளை வளர்க்கின்றனர். அதை நாம் நமது உடல் நலத்திற்காக வளர்க்கலாம். அதனால் நுரையீரலுக்கு உதவும் சில தாவரங்களை இப்போது பார்ப்போம். நாம் காலையில் எழுந்த உடனே இருமல் மற்றும் தும்மல் ஏற்படுத்துதல் நமது காலை பொழுதை வெகுவாக பாதிக்கும் என உங்களுக்கு தெரியுமா? வீடு அல்லது அலுவலகத்தில் நுழைந்தவுடன் உங்கள் முக கவசத்தை கழற்றியபின் எத்தனை பேருக்கு இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை சிந்தித்து பாருங்கள். காரணம் காற்று மாசுபாடு. இந்த மாசுபாடுகளை தவிர்ப்பதற்கு நமக்கு இயற்கையால் மட்டுமே உதவ முடியும். அதிக மரங்கள் இருக்கும்போது அவை ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து காற்று மாசுபாட்டை குறைக்கிறது. எனவே நமது வீடுகளில் அல்லது அலுவலகங்களில் மரங்கள் அதிகமாக இல்லாத போது உட்புற தாவரங்களே காற்று சுத்திகரிப்பை செய்ய வேண்டும். இதனால் பலரும் வீட்டிற்குள் செடி வளர்க்கின்றனர். ஆனால் நாம் சரியாக நுரையீரலுக்கு நன்மை தரக்கூடிய செடிகளை வளர்ப்பதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அப்படி நமது நுரையீரலுக்கு உதவும் 10 தாவரங்களை இப்போது பார்ப்போம்.

கற்றாழை

கற்றாழை முக்கியமான மருத்துவ மூலிகையாகும். இது பல்வேறு ஆரோக்கிய நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. காற்றை சுத்திகரிக்கும் ஆலை போல இது செயல்படுகிறது. இது காற்றை சுத்தப்படுத்த பயன்படுகிறது. வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இதில் நிறைந்து காணப்படுவதால் இது சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கிறது. இதை எளிதாக வளர்க்க முடியும். எனவே உட்புற தாவரமாக வளர்ப்பதற்கு உகந்த தாவரமாக கற்றாழை உள்ளது.

பாம்பு செடி

இந்த செடியின் இலைகள் பாம்பு போல நீளமாக இருப்பது இது பாம்பு செடி என அழைக்கப்படுகிறது. இது பென்சீன், ஃபார்மால்டிஹைட், டிரைக்கோரெத்திலீன் மற்றும் சைலீன் போன்ற நச்சுக்களை காற்றில் இருந்து நீக்குகிறது. இந்த செடிக்கு பெரிதாக பராமரிப்பு தேவையில்லை என்பதால் இதை எளிதாக வீட்டில் வளர்க்க முடியும். உங்கள் வீட்டின் உலர்ந்த மூலைகளில் கூட இது வளரும் தன்மை கொண்டது. மேலும் இதன் இலைகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் பார்க்க அழகாக இருக்கிறது.

மூங்கில் பனை

சிறுவயதில் பூங்காவில் உலாவும்போது நாம் பல வகையான அழகிய செடிகளை பார்த்திருப்போம். அப்படி ஒரு செடிதான் மூங்கில் பனை. இது 12 அடி உயரம் வரை வளர கூடியது. அலுவலகம் மற்றும் வீடுகளில் கவர்ச்சிக்காக வாசல் பகுதிகளில் இந்த செடியை வளர்க்கலாம். இது காற்றை சுத்திகரித்து நமது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகின்றது.

ஃபெர்ன்ஸ்

நன்கு பராமரிக்கப்பட்டு கவர்ச்சிகரமாக தொட்டியில் வைக்கப்படும்போது வீட்டிற்கு இனிமையையும் அழகையும் கொடுக்க கூடிய ஒரு செடியாக ஃபெர்ன்ஸ் உள்ளது. இது வீட்டில் நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது. சூரிய ஒளி இல்லாமலே வளர கூடிய தாவரமாக ஃபெர்ன்ஸ் இருப்பதால் நமது குளியலறை போன்ற இடங்களில் கூட இதை வளர்க்க முடியும். இது சுத்தமான காற்றை உற்பத்தி செய்வதால் நமக்கு நல்ல காற்று கிடைக்கிறது. எனவே வீட்டின் உட்புறத்தில் வளர்க்க சிறந்த தாவரமாக ஃபெர்ன்ஸ் உள்ளது.

பீஸ் லில்லி

இயற்கையோடு மனிதன் சேர்ந்து வாழ்ந்ததன் தொடர்ச்சியாகவே இன்றும் வீட்டிற்குள் செடியை வளர்க்கும்போது நாம் மன நிம்மதி அடைகிறோம். அப்படி மன நிம்மதியை அளிப்பதில் பீஸ் லில்லி முக்கிய பங்கு வகிக்கிறது. பீஸ் லில்லி பார்ப்பதற்கு சிறியதாகவும் அழகானதாகவும் உள்ளது. கோடைகாலங்களில் இதன் பூக்கள் பூத்து அதன் மகரந்தங்கள் காற்றில் கலக்கின்றன. உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிப்பதற்கு சிறந்த தாவரமாக பீஸ் இல் இருக்கும். அவர்களின் இதயத்திற்கு இதமான நறுமணத்தை அளிக்கவும் தூய்மையான காற்றை அளிக்கவும் இது உதவுகிறது.

ஃபிகஸ்

இந்த அழகிய செடியானது பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது சுத்தமான காற்றை தர கூடியதால் வீட்டிற்கு உள்ளே வளர்க்க உகந்த தாவரமாக உள்ளது. வசந்த காலங்களில் இதில் புது இலைகள் முழுப்பதால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. கோடை மற்றும் குளிர் காலங்களில் இது காற்றை சுத்தம் செய்யும் பணிகளை செய்கிறது.

சிலந்தி செடி

சிலந்தியின் கால்கள் போன்ற தோற்றத்தில் இலைகளைக் கொண்டால் இது சிலந்து செடி என அழைக்கப்படுகிறது. இந்த வீட்டு தாவரமானது பராமரிப்பதற்கு மிகவும் எளிதானது. அதில் தண்ணீரை ஊற்றி சன்னலுக்கு அருகில் வைத்தால் போதுமானது. கோடை காலங்களில் காற்றை சுத்திகரித்து நமக்கு தூய காற்றை அளிக்க இது பயன்படுகிறது.

ஃபிளமிங்கோ லில்லி

ஃபிளமிங்கோ அழகான ஒரு தாவரமாகும். இது அடர் பச்சை நிறத்தை கொண்ட செடியாகும். காற்றை சுத்திகரிக்கும் சிறந்த வீட்டு தாவரங்களில் இதுவும் ஒன்றாகும். இது வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களும் பூக்கும் தன்மை கொண்டது. ஒரு நவீன அலங்கார அறையில் அலங்கார பொருளாக இந்த தாவரத்தை வைக்கலாம். வீட்டின் ஈரப்பதமான பகுதிகளில் இது செழித்து வளரும்.

செவ்வந்தி பூ

மிகவும் அழகான மற்றும் எளிதில் வளர கூடிய ஒரு தாவரம்தான் செவ்வந்தி. அழகான தாவரம் மட்டுமின்றி இது காற்றை சுத்திகரித்து நறுமணத்தை வழங்கும் திறன் கொண்டது. நமது பட்டியலில் உள்ள மற்ற தாவரங்களோடு ஒப்பிடும்போது இதை பராமரிப்பதில் சிறிது சிரமங்கள் உள்ளன. ஆனால் இதில் உங்களுக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுத்து வளர்க்கும்போது சூரிய வெளிச்சம் நன்றாக வர கூடிய இடத்தில் இதை வளர்த்தால் இது பலன் அளிக்கும். ஆனால் அடிக்கடி அதன் மண் வறண்டு போகாமல் பார்க்க வேண்டும்.

டெவில்ஸ் ஐவி (மனிபிளாண்ட்)

வீட்டிற்குள் வளர்க்க ஒரு எளிய தாவரமாக டெவில்ஸ் ஐவி உள்ளது. இது காற்றில் உள்ள நச்சுகளான சைலீன், ஃபார்மால்டிஹைட் போன்றவற்றை சுத்தப்படுத்துகிறது. இது தொட்டிகள் மற்றும் கூடைகள் இரண்டிலுமே வளரக்கூடியது. நீங்கள் அரிதாக பார்க்க கூடிய ஒரு அறையில் இதை வைக்கலாம். நம் வாழ்க்கையில் பல நேரங்கள் பணி சுமையின் காரணமாக நம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு நாம் மறந்துவிடுகிறோம். தினமும் ஆரோக்கியமான உணவு உண்பதும் உடற்பயிற்சி செய்வதும் இன்றியமையாதது ஆகும். ஆனாலும் நாம் சுவாசிக்கும் காற்று குறித்து நாம் சிந்திப்பதே இல்லை. உங்கள் நுரையீரல் சுத்தமான காற்றை சுவாசிப்பது மூலம் சுவாசமாக ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க முடியும். எனவே இந்த தாவரங்களை வீட்டில் வளர்த்து தூய்மையான காற்றை பெறலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment