பிரபல பின்னணி பாடகி காலமானார்! திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்

Date:

பிரபல பின்னணி பாடகி கல்யாணி மேனன் காலமானார் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!

பிரபல பின்னணி பாடகி மற்றும் முன்னணி இயக்குநரான ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மதியம் காலமானார். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜீவ் மேனனின் அம்மாவும், பிரபல பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன் உடல்நலக்குறைவால் காலாமானார். அவருக்கு வயது 80.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி மேனன். பிரபல பின்னணி பாடகியான இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 1973 ம் ஆண்டு அபலா என்ற படம் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான கல்யாணி, தமிழில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மலையாளத்தில் அதிக பாடல்களைப் பாடியுள்ள கல்யாணி மேனன், ஷங்கரின் ‘காதலன்’ படத்தில் ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’, ரஜினிகாந்தின் ‘முத்து’ படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘குலுவாலிலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஓமணப் பெண்ணே’ உள்ளிட்ட பல பாடல்களில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். கடைசியாக தமிழில் 96 படத்தில் இடம் பெற்ற காதலே காதலே பாடலை பாடியிருந்தார் கல்யாணி.

தொடர்ச்சியாக 80 வயதான கல்யாணி உடல்நல பிரச்சனை காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் காலமானார் கல்யாணி. அவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவிக்கின்றனர். கல்யாணியின் இறுதிச்சடங்கு நாளை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்