சன்னி லியோன் உடன் டூயட் ஆட தயாராகும் ‘டிக்டாக்’ ஜிபி முத்து குஷியில் ரசிகர்கள்!
யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ஒன்றில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்துவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சன்னி லியோன், தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். அதன்பிறகு தமிழ் படங்களில் எதுவும் கமிட் ஆகாமல் இருந்த சன்னி லியோன் தற்போது யுவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் டிக்டாக் மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மம்மூட்டியின் மதுர ராஜா படத்தின் மூலம் மலையாள சினிமாவி;லும் அறிமுகமான சன்னி லியோன் தற்போது ரங்கீலா, ஷீரோ என இரு மலையாள படங்களில் முக்கிய நடித்து வருகிறார். தமிழில் வடிவுடையான் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று படமாக வீரமாதேவி எனும் டைட்டிலில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார் சன்னி லியோன். ஆனால் ஒருசில காரணங்களால் அந்தப்படமும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் நீண்ட காலமாகவே தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்ட சன்னி லியோன், தற்போது யுவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஹாரர் காமெடி படமாக உருவாகும் இந்தப்படத்தில் நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்துவும் இந்தப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிக் டாக் தடைக்கு பிறகு யூடியூப்பில் இயங்க ஆரம்பித்த இவருக்கு குறைந்த காலகட்டத்திலேயே 9 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்ஸ்கள் பின் தொடர ஆரம்பித்தனர். இவர் குறித்த மீம்ஸ்களும், வீடியோக்களும் தினமும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.
இந்நிலையில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் ஜி.பி.முத்துவும் இணைந்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரசக்தி மற்றும் சசிகுமார் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளனர். அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.