28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
மருத்துவம்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையா??? இதோ டிப்ஸ்..

 

புதினா மிளகு கீரை என்றும் இது சொல்லப்படுகிறது. புதினா இலைகளை கொண்டு தயாரிக்கும் புதினா துவையல் பலமான விருந்தில் கண்டிப்பாக இருக்கும்.இது செரிமானத்தை தூண்டுகிறது. புதினாவை வாசனை மிக்க தயாரிப்புகளில் சேர்க்கிறார்கள். புதினாவிலிருந்து எடுக்கப்படும் புதினா எண்ணெய் இயற்கை வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

புதினாவில் புரதம், கொழுப்பு, கார்போஒஹைட்ரேட், நார்ச்சத்து, உலோகச்சத்து. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரைபோ மினெவின் தயாமின் போன்ற சத்துகளும் அடங்கியுள்ளது. இதை எப்படி எடுத்துகொண்டாலும் இதன் குணங்கள் மாறாது என்பதோடு இதை எப்படி உணவில் சேர்த்தாலும் சுவை அதிகரிக்க கூடும். இந்த புதினாவை கைவைத்தியத்துக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

​கர்ப்பகால வாந்தி
வாந்தி என்றாலே கர்ப்பிணிகள் தான் நினைவுக்கு வருவார்கள். கர்ப்பகால வாந்தியை தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. ஆனால் இதை கட்டுப்படுத்த செய்யலாம். ஏனெனில் சில கர்ப்பிணிகள் கர்ப்ப காலம் முழுக்க வாந்தி எடுப்பதுண்டு. இதை கட்டுப்படுத்த முன்னோர்களின் வைத்தியத்தில் புதினா வைத்தியம் சிறந்ததாக இருக்கும்.

எப்படி எடுக்கலாம்…
புதினா இலையை சுத்தம் செய்து உரலில் இட்டு இடித்து அதன் சாறை பிழிந்து எடுக்கவும். இதை வடிகட்டி ஒரு பெரிய டம்ளரில் எடுத்து அதனுடன் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் சீமைக்காடி அல்லது ஒரு டம்ளர் நீர் சேர்த்து இந்த திரவத்தில் மூன்றூ மடங்கு சர்க்கரை கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து காய்ச்ச வேண்டும்.பாகு பதம் வரும் போது காய்ச்சி இறக்கி கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
கர்ப்பகாலத்தில் வாந்தி வரும்போது ஒரு டீஸ்பூன் அளவு அப்படியே வாயில் போட்டு அடக்கி சிறிது சிறிதாக உமிழ்நீரோடு கலந்து விழுங்க வேண்டும். இப்படி செய்தால் வாந்தி உணர்வு இருக்காது. கர்ப்பிணிகளுக்கு மட்டும் இல்லாமல் வாந்தி வரும் அனைவருமே இதை சாப்பிடலாம்.

​வயிற்றுப்போக்கு
வயிற்றுப்போக்கு காலத்தில் புதினாவை கைவைத்தியமாக பயன்படுத்தலாம். இது நீரிழிப்புக்கு சிறிதேனும் மாற்றாக இருக்கும். உடல் இழந்த சோர்வை ஈடு செய்யும். குறிப்பாக குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம். வயிற்றுப்போக்கு மருந்தோடு இந்த புதினாவையும் கொடுத்தால் வயிற்றுப்போக்கு தீவிரம் குறையும். புதினா பக்க விளைவில்லாதது என்பதால் தைரியமாக சேர்க்கலாம்.

எப்படி எடுக்கலாம்….
பழூப்பு நிற இலைகளை நீக்கி ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை எடுத்து சுத்தம் செய்து மண் சட்டியில் வதக்கவும். பிறகு ஒரு டம்ளர் நீர் விட்டு காய்ச்சவும். அது அரை டம்ளராக மாறும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டவும் இந்த நீரை ஆறவைத்து குழந்தைகளுக்கு காலை மாலை 5 டீஸ்பூன் அளவு கொடுத்து வந்தால் போதும். வயிற்றுப்போக்கு படிப்படியாக குறையும்.

​பல் கோளாறுகள் நீங்க
பற்கள் எப்போதுமே பளிச் என்று இருக்க விரும்பினால் பராமரிப்பும் சீராக இருக்க வேண்டும். பொதுவாக வாய் துர்நாற்றத்துக்கு தான் புதினாவை சேர்ப்பார்கள். புதினா நீரில் வாய் கொப்புளிக்க செய்வது, புதினா கலந்த மவுத் வாஷ் பயன்படுத்துவதும் உண்டு. ஆனால் பற்களுக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய ஒன்றாக மட்டுமே புதினாவை எடுக்காமல் பல் கோளாறு வராமல் தடுக்க புதினா பொடியை பயன்படுத்தலாம்.

என்ன செய்யலாம்….
புதினா இலைகளை அலசி காயவைக்க வேண்டும். அவை நொறுங்கும் அளவு காய்ந்தது, அதை எடுத்து உரலில் அல்லது மிக்ஸியில் பொடிக்கவும். ஒன்றிரண்டாக பொடித்த புதினா தூளுடன் நான்கில் ஒரு பங்கு உப்பு சேர்த்து மீண்டும் இடித்து சல்லடையில் சலிக்கவும். தினமும் இந்த பொடியில் பல் தேய்த்து வந்தால் வாய் துர்நாற்றம் மட்டும் அல்லாமல் பல் சம்பந்தமான கோளாறுகள் எதுவுமே வராமல் தடுக்கலாம்.

​குமட்டல் நிற்க
குமட்டல் உணர்வு வேறு வாந்தி உணர்வு வேறு. சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் குமட்டல் இருந்துகொண்டே இருக்கும். வாந்தி இருக்காது. தலைசுற்றலும் இருக்கும். குமட்டல் இருந்தால் புதினாகீரை வைத்தியம் செய்யலாம். குமட்டல் உணர்வு வராமல் தடுக்க முடியும்.

என்ன செய்யலாம்….
கைப்பிடி அளவு புதினாவை எடுத்து சிறு நெல்லி அளவு புளி சேர்த்து மிளகு 10 சேர்த்து அம்மியில் மைய அரைக்கவும். இதை மண்சட்டியில் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி அப்படியே அல்லது வடிகட்டி அதன் சாறை சிறிது சிறிதாக குடித்துவந்தால் குமட்டல் உணர்வு நிற்கும்.

​மாதவிடாய் பிரச்சனை
மாதவிடாய் ஒழுங்கற்று இருந்தால் அதை உணவு மூலமாகவும் சரி செய்யலாம் என்பதற்கு உதாரணம் புதினா என்று சொல்லலாம். எப்படி இதை பயன்படுத்துவது ஒரு கிலோ அளவு பெரிய கட்டு கொண்ட புதினா இலையை வாங்கி சுத்தம் செய்து அதை வெயிலில் காயவைக்கவும்.

அவை நன்றாக காய்ந்து நிழலில் உலர்த்த வேண்டும். சருகு போல் ஆகும் வரை விட்டு பிறகு மிக்ஸியில் பொடித்து சல்லடையில் சன்னமாக சலித்துவைக்க வேண்டும். பிறகு அந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
தினமும் காலை மற்றூம் இரவு நேரத்தில் முக்கால் டீஸ்பூன் அளவு பொடியுடன் தேன் கலந்து குழைத்து சாப்பிட்டு வந்தால் தடைபட்ட மாதவிலக்கு சீராக வரக்கூடும். மாதவிடாய் காலத்தில் வரக்கூடிய உபாதைகளும் குறையும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment