உலர் திராட்சையானது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. ஆனால் அது சருமத்திற்கு பல நன்மைகள் செய்கிறது என்பது பலர் அறியாத விஷயமாகும். எனவே திராட்சை சருமத்திற்கு என்ன நன்மைகளை செய்கிறது என பார்ப்போம்.
நம் அனைவருக்கும் உலர்ந்த திராட்சை மிகவும் பிடிக்கும். மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. திராட்சையை காயவைத்து இந்த உலர்ந்த திராட்சையானது தயாரிக்கப்படுகிறது. உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை இது அளிக்கிறது.
உலர் திராட்சையின் சரும நன்மைகள்..
உலர் திராட்சையானது சருமத்திற்கு செய்ய கூடிய நன்மைகளை ஆராய்வதற்காக சில ஆய்வுகள் நடத்தப்பட்டன. திராட்சை வயதாவதால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை தாமதப்படுத்துகிறது. மேலும் சருமத்தில் தோன்றும் புள்ளிகள், கறைகள் மேலும் பிற பிரச்சனைகளையும் சரி செய்ய கூடியதாக உலர் திராட்சை உள்ளது. மேலும் இது சருமத்திற்கு பல நன்மைகளை செய்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டது.
ஊட்டச்சத்துக்கள்..
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் திராட்சையில் அதிகமாக உள்ளன. இவை சருமம் ஆரோக்கியமான வகையில் பளபளப்பாக மாற உதவுகிறது. மேலும் உலர் திராட்சையானது சருமத்தை மிகவும் மிருதுவாகவும் பிரகாசமாகவும் மாற்றுகிறது.
உலர் திராட்சையில் ஃபேஸ் மாஸ்க்க்ஷ செய்யும் முறை!!!
உலர் திராட்சையானது நமது சருமத்தை மேம்படுத்துவதற்கு எவ்வாறு உதவுகிறது என்பது இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நமது சருமத்திற்கு மேலும் உதவ உலர் திராட்சை ஃபேஸ் மாஸ்க் உதவுகிறது. ஆனால் இந்த ஃபேஸ் மாஸ்க்கை எப்படி செய்வது என்கிற கேள்வி பலருக்கு இருக்கலாம். இப்போது உலர் திராட்சை ஃபேஸ் மாஸ்க்கை எப்படி செய்வது என பார்க்கலாம். இது எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கான செய்முறை ஆகும்.
தேவையான பொருட்கள்
உலர் திராட்சை
தேயிலை மர எண்ணெய் (தலைமுடிக்கு பயன்படுத்தப்படுவது)
எலுமிச்சை
கற்றாழை
ஃபுல்லர்ஸ் எர்த் (ஒருவகை மண்)
செய்முறை
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து அவற்றை நன்றாக கலந்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து முகத்தில் தடவ பேஸ்ட் பதத்திற்கு ஏற்றாற் போல அவற்றை மாற்றவும். அரைத்த கலவை கொஞ்சம் வறண்டதாக காணப்பட்டால் அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக்கொள்ளவும். முகத்தை சுத்தமாக கழுவிக்கொண்டு உங்கள் விரல்களை பயன்படுத்தி இந்த கலவையை முகத்தில் பூசவும். முழுமையாக பூசிய பிறகு 25 நிமிடங்கள் அதை அப்படியே முகத்தில் வைத்திருக்கவும். பிறகு தண்ணீரில் முகத்தை கழுவவும்.
சாதாரண சருமம் உள்ளவர்களுக்கான செய்முறை..
மேலே குறிப்பிட்டுள்ள முறையானது சருமத்தில் அதிகமாக எண்ணெய் தன்மை கொண்டவர்களுக்கானது. சருமத்தில் எண்ணெய் தன்மை இல்லாதவர்கள் எப்படியான ஃபேஸ் மாஸ்க்கை அணிய வேண்டும் என இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உலர் திராட்சை
தயிர்
வெள்ளரிக்காய்
பால்
கடலை மாவு
ரோஜா இதழ்கள்
செய்முறை
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து அவற்றை நன்றாக கலந்துக்கொள்ளவும். பின்னர் அவற்றை மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல செய்துக்கொள்ளவும். பிறகு அதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். இப்போது ஃபேஸ் மாஸ்க் நன்றாக காய்ந்து இருக்கும். பிறகு தண்ணீரில் ரோஸ் வாட்டரை கலந்து அதை கொண்டு முகத்தை கழுவவும். மேலே கூறப்பட்டுள்ள மாஸ்க் முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்வதன் மூலம் சருமத்தில் நல்ல முடிவுகளை பெற முடியும்.