வாக்குறுதிகள் புஸ்வாணம்: வடக்கு ஆளுனர் அலுவலகம் முன் சுகாதார தொண்டர்கள் போராட்டம்!

Date:

தமக்கு வழங்கப்பட்ட நியமன கடிதத்திற்கு தமது பணிகளை பொறுப்பேற்க அனுமதிக்குமாறு கோரி இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் கடந்த 155 நாட்களாக வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

யாழ் மாவட்டத்திற்கு வந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கொழும்பிற்கு வருமாறும் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பும் இடம்பெற்றது.

சந்திப்பின்போது குறித்த சுகாதார தொண்டர்களை ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்குள் உள்வாங்குவதாகவ தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் அவர்களுக்குரிய வேலை வாய்ப்பு தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் இன்று வரை மேற்கொள்ளப்படாததன் காரணமாக இன்றைய தினம் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்