26.5 C
Jaffna
January 5, 2025
Pagetamil
மருத்துவம் லைவ் ஸ்டைல்

கொழுப்பை கரைக்க விரும்புபவர்களா நீங்கள்? அப்ப இது உங்களுக்குத் தான்.

வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க உதவும் பானங்கள். சில இயற்கையான பானங்களை அருந்துவது பயனளிக்கும் என்கின்றது ஆராய்ச்சி. ஆப்பிள் சிடார் வினிகர், லெமன் வாட்டர், க்ரீன் டீ போன்ற பானங்களை எடுப்பது கொழுப்பு செல்களை தூண்டி உடம்பின் உள்ளிருக்கும் கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.

 ஆரோக்கியமாக இருக்க நம்முடைய உடல் நிறை குறியீட்டெண் சரியான அளவில் பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு நம் உடல் எடையை கட்டுப்பாட்டான முறையில் வைத்திருக்க வேண்டும். வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைப்பது என்பது நிறைய பேருக்கு சிக்கலான காரியமாக உள்ளது.

​உடலில் தங்கும் கொழுப்பு

இந்த கொழுப்புகளை குறைக்க சில வகை பானங்கள் உள்ளன. இவை சீரான குடல் ஆரோக்கியத்திற்கும், அதேநேரத்தில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இப்படி கொழுப்பை குறைக்கும் உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் என்சைம்கள் உள்ளன. நீங்கள் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்க கொழுப்பை குறைக்க உதவுகிறது. சரி வாங்க கொழுப்பை எரிக்கும் இந்த 5 பானங்களை எப்படி தயாரிக்கலாம் என அறிவோம்.

கொழுப்பை குறைக்கும் பானங்கள்.

தட்டையான வயிற்றை பெற என்ன செய்ய வேண்டும்.

கொழுப்பு பானங்களை குடித்து வரும் போது அதிக கொழுப்பு செல்களை உடைக்க முடியும். இது உங்க இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. இது நம்முடைய செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த பானங்கள் ஒரு இயற்கையான டையூரிடிக் ஆகும். உடலில் அதிகளவு நீர் சேர்வதை தடுக்கிறது.

​ஆப்பிள் சிடார் வினிகர்.

ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு பிரபலமான காலை பானமாகும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இந்த ஆப்பிள் சிடார் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் பசியை குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் நீங்கள் அதிகமாக சாப்பிட மாட்டீர்கள். உங்க உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.

பயன்படுத்தும் முறை :

1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

1 கப் (வெதுவெதுப்பான நீர்)

1 தேக்கரண்டி மூல தேன்

1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு

என நான்கு பொருட்களையும் ஒன்றாக கலந்து, வாரத்திற்கு 3-7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

​லெமன் வாட்டர்

எலுமிச்சை சாறும் கொழுப்பை கரைப்பதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. காலை உணவுக்கு முன் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை நீங்கள் பருகி வரலாம். லெமன் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி டயாபெட்டிக், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் போன்ற பண்புகள் உள்ளன. இது கொழுப்பை எரிக்க உதவுகிறது. பசியை அடக்குகிறது. கொழுப்பு செல்கள் உள்ளுறுப்பில் இருக்கும் கொழுப்பை கரைக்க உங்களை தூண்டும்.

1 டம்ளர் தண்ணீர் உடன் 1/4 பங்கு லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் அதனுடன் சுவைக்கு 1 டீ ஸ்பூன் தேன் அல்லது இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆன்டி பாக்டீரியல் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. அதே மாதிரி எலுமிச்சை மட்டுமில்லாது பிற சிட்ரஸ் பழங்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

​க்ரீன் டீ

எடை குறைப்பு என்று வரும் போது பொதுவாக க்ரீன் டீ பயன்படுத்தப்படுகிறது. க்ரீன் டீயில் பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இவை மூளை செயலாக்கத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது. கலோரிகளை குறைக்க உதவுகிறது. க்ரீன் டீயில் உள்ள கேட்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் மெட்டா பாலிசத்தை அதிகப்படுத்தி கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஒரு நாளைக்கு 300 மி. கி /நாள் க்கு மேல் காஃபைன் எடுப்பது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது.

1 கப் க்ரீன் டீ, கொஞ்சம் சுடுநீர், ஒரு கப், 1/2 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ தூள் எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் க்ரீன் டீத்தூளை போட்டு கொதிக்க விடுங்கள். 45 நிமிடங்கள் கொதிக்க வேண்டும். பிறகு வடிகட்டி குடியுங்கள். தேன் சேர்ப்பது கூடுதல் சுவை அளிக்கும்.

​காபி :

காபி நம்முடைய ஆற்றலை அதிகரிக்கும் பானமாகும். காபியில் நைட்ரஜன், வைட்டமின்கள், தாதுக்கள், ஆல்கலாய்டுகள் மற்றும் பினோலிக் கூறுகள் போன்ற பல சேர்மங்கள் காணப்படுகிறது. பச்சை காபி கொட்டைகள் மற்றும் லேசாக வறுத்த காபி கொட்டைகளில் குளுரோஜெனிக் அமிலங்கள் உள்ளன. இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தவும், எடையை குறைக்க உதவும் பாலிபினால்கள் இதில் உள்ளன. காபியானது வளர்சிதை மாற்ற நோய்க்குறி, வகை II நீரிழிவு ஆபத்து, கல்லீரல் பாதிப்பு, பார்கின்சன் நோய், அல்சைமர் நோய் போன்ற நோய்களை விரட்ட உதவுகிறது. எனவே தினமும் காபி குடிப்பது உங்க எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

​நீர் :

உடல் எடையை குறைப்பதில் நீர் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு நீர் அருந்துவது உங்க பசியை குறைத்து உடல் எடையை குறைக்க உதவி செய்யும். குளிர்ந்த நீர் உங்க உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதி எடை கொண்ட குழந்தைகள் குளிர்ந்த நீரை குடித்த 40 நிமிடங்களில் 25%ஆற்றலை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிக தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி விடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

Leave a Comment