மேல் மாகாணத்தில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்த, முன்பதிவு அடிப்படையிலான 77 தடுப்பூசி மையங்கள் இயங்குகின்றன.
அது தவிர, 24 மணித்தியால அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு – விகாரமஹாதேவி பூங்கா வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8.30 மணி அளவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முன்பதிவின் அடிப்படையில் இயங்கும் 77 மையங்கள் பற்றிய விபரம்-





