சிறுதானியங்கள் எவ்வளவு நல்லது… அதை சமைப்பது எப்படி….

Date:

சிறுதானியங்கள் எவ்வளவு நல்லது… அதை சமைப்பது எப்படி….

பொதுவாக சத்தான உணவு என்று நினைக்கும் போது நம் நினைவுக்கு வருவது சிறு தானியங்கள் தான். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் சிறு தானியங்களையே எடுத்துக் கொண்டு இருக்க முடியாது. அது நம் உணவு முறையில் ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடும். எப்படி சலிக்காமல் இந்த சிறு தானிய உணவை பின்பற்றலாம் என பார்ப்போம்.

​தினை உணவை எப்படி எடுத்துக் கொள்ளலாம் :

சிறு தானியங்களில் மிகவும் சத்தான தானியம் தான் தினை அரிசி. தினை அரிசி நமக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை அளிக்கக் கூடிய சிறு தானியமாகும். அதனால் தான் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தினை மாவால் செய்யப்பட்ட திண்பண்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். தினை அரிசி ஒரு பசையம் அல்லாத உணவாகும். இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகின்றன. இதில் நிறைய அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. உங்களுக்கு அதிகமான கால்சியம் சத்தை தர உதவுகிறது. இதனால் எலும்பு மற்றும் பற்கள் வலிமைக்கு தினை அரிசி சிறந்த தேர்வாகும்.

நம்முடைய மக்கள் தொகையில் 97% மக்கள் பசையம் உணர்திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். எனவே பசைய அழற்சி இருப்பவர்கள் தினை உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் இந்த தினை உணவுகளை எப்படி எடுத்துக் கொள்ளலாம்.

தினையை நன்றாக ஊற வைத்து சமைத்து சாப்பிட வேண்டும். எனவே தினையை குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊற வைக்கும் போது தினை அரிசியை சீக்கிரமாக வேக வைக்க முடியும். இதனால் சமைக்கும் நேரம் குறையும்.

10 நாட்களில் மூன்று முறைக்கு மேல் எப்பொழுது பார்த்தாலும் தினை போன்ற புளித்த கஞ்சியையே எடுத்துக் கொள்ளாதீர்கள். புளித்த கஞ்சி உங்க குடலில் வளரும் நல்ல பாக்டீரியாக்களுக்கு நல்லது என்றால் கூட அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே தினை கஞ்சியை தவிர விதவிதமான தினை உணவு வகைகளை உண்ணலாம். பதப்படுத்தப்பட்ட தினை மாவு, தினை சேமியா, தினை ப்ளாக்ஸ்யை பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை நீங்களே தினை மாவை தயாரியுங்கள்.

​உங்க உணவுத் திட்டத்தை புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தினை உணவை பின்பற்ற போகிறீர்கள் என்றால் ஒரு சிறு தானிய உணவையும் இதர உணவுகள் தானியமில்லாத உணவாக இருக்கட்டும். அப்பொழுது தான் உங்களுக்கு சலிப்பு ஏற்படாது. வாரத்திற்கு 6 உணவுகள் என படிப்படியாக உங்க திட்டத்தை அதிகரியுங்கள்.

தினை போன்ற சிறு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது ஒரு பகுதியை தினை சாலட்டாகவும், மதிய உணவுக்கு அரிசி சாதமும் எடுத்துக் கொள்ளலாம். அதே மாதிரி தினை மாவைக் கொண்டு தோசையை தயார் செய்யலாம். இரவு உணவிற்கு தினை கபாப் சிறந்த தேர்வாக இருக்கும். இப்படி பசையம் இல்லாத உணவை எடுத்துக் கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே உங்க தினை உணவு திட்டத்தில் கொஞ்சம் வித்தியாசத்தை புகுத்துங்கள்.

 

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்