தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடிப்பால் பெயரெடுத்தனர். பல நடிகைகள் கொஞ்சம் நடிப்பு, கொஞ்சம் சர்ச்சையென பெயரெடுத்தனர். இன்னும் சிலர் ஏடாகூடங்களால் மட்டும் பெயரடிபடுபவர்கள். நடிகை மீரா மிதுன் மூன்றாவது ரகம்.
விஜய் சூர்யா மற்றும் ரஜினிகாந்த் ஆகிய பிரபலமான நடிகர்களை பற்றி தரக்குறைவாக பேசி சமூக வலைதளங்களில் சர்ச்சையில் சிக்கினார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளனார். அதன்பிறகு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக தான் பல நடிகர்களை பற்றி தவறாக பேசி கவனத்தை ஈர்த்த வருகிறார் என பலரும் கூறி வந்தனர்.
தற்போது ஆல்பம் சாங் போன்றவற்றில் நடித்து சமூகவலைத்தள பக்கத்தில் பாடலை வெளியிட்டு வருகிறார். அவற்றில் படு கவர்ச்சியாக நடிக்கிறார். கிட்டத்தட்ட ஆபாச நடிகைகளின் ரேஞ்சில் அவர் நடிப்பதாக முீரா மிதுனை திட்டித் தீர்க்கிறார்கள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் மீரா மிதுன் கவலைப்படவில்லை.
தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்படி இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
எப்படியாவது சினிமாவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான புகைப்படங்களை அவரே வெளியிட்டு வருகிறார் என்பதுதான் கொடுமை!