2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீ இறுதிப் போட்டியில் இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ் தங்கம் வென்றார்.
மார்செல் 9.80 என்ற தனிப்பட்ட சிறந்த நேரத்தை பதிவு செய்தார்.
அமெரிக்காவின் பிரெட் கெர்லி மற்றும் கனடாவின் ஆண்ட்ரே டி கிராஸ் – முறையே 9.84 மற்றும் 9.89 செக்கனில் இலக்கை அடைந்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
அமெரிக்காவின் ரோனி பேக்கர் 9.95 செக்கனுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
சீனாவின் சு பிங்டியன் ஆசிய சாதனை படைத்தார். அவர் அரையிறுதியில் 9.83 செக்கன் நேரத்துடன் தகுதி பெற்றார். ஆனால் இறுதிப் போட்டியில் ஆறாவது இடத்தையே பெற்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1