கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பொலிசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், கோப்பாய் பொலிசாரால் வாகனத்தில் கடத்தி தாக்கப்பட்டதாக இளைஞன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து, அது தொடர்பில் திணைக்கள விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளிற்கு இடையூறு ஏற்படக்கூடாதென்பதற்காக உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 4 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வட்டுக்கோட்டை, கொடிகாமம் பொலிஸ் நிலையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.