27 C
Jaffna
January 11, 2025
Pagetamil
மருத்துவம்

பித்தகோளாறை தணிக்கும் மருத்துவ முறை…

 

உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் ஒன்று குறைந்து மற்றொன்று அதிகரித்தாலும் உடலில் நோய் எட்டிபார்க்க தொடங்கிவிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் இவை குறைய தொடங்கும் போதே உணவு முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடுவார்கள். அது போன்றே நம் முன்னோர்கள் உடலில் தென்படும் அறிகுறிகள், அதன் வரலாறை கணித்தே ஆரோக்கிய குறைபாட்டை கண்டறிந்துவிடுவார்கள்.

பித்தம் தொடர்பான பிரச்சனைகளை எளிமையாக போக்க பல வைத்தியங்களை பழகியிருக்கிறார்கள். பித்த மயக்கம், பித்த வாந்தி, பித்த வெடிப்பு, பித்தத்தால் தலைச்சுற்றல், பித்தநீர் அதிகமாக சுரப்பது என்று பித்த கோளாறுகளுக்கு ஏற்ற வைத்தியத்தை உணவு முறையாகவே செய்து விடுவார்கள்.

உடலில் பித்தம் தணிக்காதவாறு உணவு முறையை அமைத்துகொண்டவர்கள் நம் முன்னோர்கள். பித்தம் மட்டும் அல்லாமல் வாத கோளாறுகள், கப பிரச்சனைகளும் வராமல் சரியான நேரத்தில் உணவு முறையை மாற்றி திறம்படஎடுத்துகொள்வார்கள்.

பித்தம் தணிக்க வீட்டில் பெரியவர்கள் அதிகம் பயன்படுத்துவது இஞ்சி தான். இஞ்சியை கொண்டு செய்யும் இஞ்சி சூரணா பித்தக்கோளாறுகள் அனைத்தையும் சரி செய்ய கூடியவை. பித்தநீரை சீராக சுரக்க செய்வதோடு பித்தப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும். பித்தகோளாறுகள் இருப்பவர்கள் இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவை

இஞ்சி – 50 கிராம்
எலுமிச்சை சாறு – 4 டீஸ்பூன்
இந்துப்பு – 10 கிராம்

இஞ்சியை மண் போக கழுவி விடவும். இதன் தோலை உரித்து சிறு துண்டுகளாக ( மணத்தக்காளி விதை முதல் சுண்டைக்காய் வரை சாப்பிட உகந்த அளவு) நறுக்கி விடவும். இதை அகலமான பாத்திரத்தில் இட்டு விதை நீக்கிய எலுமிச்சை சாறை பிழிந்து விடவும். இதில் இந்துப்பை சேர்த்து நன்றாக கிளறி விடவும். எலுமிச்சை சாறும், உப்பும் சேர்ந்து இஞ்சியில் ஊறத்தொடங்கும். ஒரு நாள் அப்படியே வைத்திருந்து மறுநாள் வெயிலில் இஞ்சித்துண்டுகளை எடுத்து காயவிடவும்.

மாலை மீண்டும் எலுமிச்சை இந்துப்பு சேர்த்த கலவையில் இஞ்சியை போடவும். இப்படி இஞ்சி துண்டுகள் அதில் ஊறி ஊறி மறுநாள் வெயிலில் வைக்க வேண்டும். எலுமிச்சை, இந்துப்பு சாறு முழுவதுமாக இஞ்சி துண்டுகள் உறியும் வரை வைத்து நன்றாக காய்ந்ததும் அதை கண்ணாடி பாட்டிலில் வைத்துகொள்ளவும்.

எப்படி சாப்பிடுவது…
தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்துவிட்டு பிறகு இந்த இஞ்சி துண்டு கால் டீஸ்பூன் அல்லது 3 துண்டுகளை எடுத்து வாயில் போட்டு உமிழ்நீரோடு கலந்து மென்று விழுங்கவும். இதை சாப்பிட்ட அரைமணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிட கூடாது. தேவையெனில் வெந்நீர் குடிக்கலாம். இதே போல் மாலை உணவுக்கு பிறகு 2 மணி நேரம் கழித்து வெறும் வயிறாக இருக்கும் போது இரண்டு துண்டு போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்ட அரை மணி நேரம் வரை வேறு எதையும் சாப்பிட கூடாது.

தொடர்ந்து 7 நாட்கள் வரை சாப்பிட்டு வந்தால் பித்தக்கோளாறுகள் குணமாகும். பித்த நோய்களின் அறிகுறி குறைவதை பார்க்கலாம். பிறகு இரண்டு வாரங்கள் இடைவெளிவிட்டு ஒரு வாரம் எடுக்கலாம்.

யாரெல்லாம் சாப்பிடலாம்…
ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஒரு இஞ்சு துண்டுடன் தேன் சேர்த்து கொடுக்கலாம். இளவயதினர், நடுத்தர வயதினர், வயதானவர்கள் அனைவருமே இதை சாப்பிடலாம்.

பலன்கள்..
இஞ்சி செரிமானத்தை மேம்படுத்தும். உடலில் இருக்கும் பித்த நீர் மலத்துடன் வெளியேறும். ஜீரண உறுப்புகள் வலிமையாகும். உடலில் இருக்கும் அதிகப்படியான பித்தம் குறைந்து உடல் சமநிலைக்கு வரும். ரத்தத்தில் இருக்கும் பித்தம் குறையும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment