27.3 C
Jaffna
December 30, 2024
Pagetamil
சினிமா

கோடிகளை குவித்த கமலின் ‘விக்ரம்’: புதிய சாதனை!

கோடிகளை குவித்த கமலின் ‘விக்ரம்’: புதிய சாதனை!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை மிகப்பெரிய விலை கொடுத்து கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா இரண்டாம் அச்சுறுத்தல், சட்டமன்ற தேர்தல் போன்ற காரணங்களால் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதனை தொடர்ந்து தேர்தல் முடிந்த கையோடு படத்தில் பணியாற்ற உள்ள மற்ற டெக்னீஷியர்கள் குறித்த அப்டேட்யும் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

விக்ரம் திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் அண்மையில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெருமளவில் வைரலானது. இந்நிலையில் கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை வாங்கியுள்ளது.

சமீபகாலமாக தென்னிந்திய படங்களின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கப்படுகிறது. இந்தி தொலைக்காட்சிகளிலும் தென்னிந்திய படங்கள் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. அத்துடன் யூடியூபிலும் இந்த டப்பிங்குகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. வெற்றிமாறனின் அசுரன் படத்தின் இந்தி டப்பிங்கும் யூடியூப்பில் 4 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விக்ரமின் இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மைன்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் 35 கோடிகளுக்கு வாங்கியுள்ளது. கமலின் எந்தப் படமும் இதுவரை இத்தனை பெரிய தொகைக்கு விலைபோனதில்லை. படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் நடிப்பதால் பாலிவுட்டில் இவ்வளவு பெரிய தொகைக்கு விக்ரம் படம் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

‘சூர்யா 44’ பட டைட்டில் டீசர் டிச.25இல் ரிலீஸ்

Pagetamil

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து செய்தி

east tamil

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

Leave a Comment