வெறும் ரூ.7999-க்கு Phone-ஆ! இனிமே Samsung, Redmi-லாம் எதுக்கு?
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக இன் 2பி மாடல் இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோமேக்ஸ் இன் 1பி மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
இது 13MP டூயல் ரியர் கேமராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பிரதான அம்சங்களுடன் வருகிறது.
இது 6.52 இன்ச் எச்டி + வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே, யுனிசோக் டி 610 எஸ்ஓசி, பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார், 5000 எம்ஏஎச் பேட்டரி, செவ்வக வடிவிலான கேமரா அமைப்பில் இரண்டு கேமராக்கள் போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் இன் 2பி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:
மைக்ரோமேக்ஸ் இன் 2பி – 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.7,999
மைக்ரோமேக்ஸ் இன் 2பி – 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் – ரூ.8,999
இது கருப்பு, நீலம் மற்றும் பச்சை வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது Flipkart மற்றும் Micromaxinfo.com வழியாக வாங்க கிடைக்கும்.