26.8 C
Jaffna
December 21, 2024
Pagetamil
மருத்துவம்

விட்டமின் டி பற்றாக்குறை இருக்கா? ஆயுர்வேத மருத்துவம்…

விட்டமின் டி பற்றாக்குறை இருக்கா? ஆயுர்வேதம் மருத்துவம்…

விட்டமின் டி என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். ஆனால் இந்த விட்டமின் டி பற்றாக்குறையால் ஆண்டு தோறும் நிறைய மக்கள் பாதிப்படைகின்றனர். விட்டமின் டி என்பது ‘சூரிய ஒளி விட்டமின்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த விட்டமின் டியை நீங்கள் சூரிய ஒளியில் இருந்து அதிகமாக பெற முடியும். இந்த விட்டமின் டி நம் உடலுக்கு நிறைய வேலைகளை செய்கிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.

விட்டமின் டி தான் எலும்பு ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் அவசியம். பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. விட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு ஏற்படலாம். நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலமும் பலவீனமாகும். இது போக விட்டமின் டி பற்றாக்குறை சளி, காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தும். இது சோர்வு, முடி உதிர்தல், எலும்பு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. இது நம்முடைய கல்லீரல் செயல்பாட்டை பாதிக்கும். நம்முடைய வளர்ச்சிதை மாற்றத்தில் விட்டமின் டி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இத்தகைய நன்மைகளைத் தரும் விட்டமின் டி பற்றாக்குறையை எப்படி போக்கலாம் என ஆயுர்வேதம் சில வழிகளை நமக்கு கூறுகிறது.

விட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்கள் எப்படி விட்டமின் டியை பெறலாம் என அறிவோம்.

விட்டமின் டி பற்றாக்குறையால் ஏற்படும் பெரிய பிரச்சினை முடி உதிர்வு. விட்டமின் டி பற்றாக்குறை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும். அதேமாதிரி எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு போன்றவற்றை சந்திக்கின்றனர்.

ஆயுர்வேதத்தில் இந்த பிரச்சினையை தாது என்று அழைக்கின்றனர். தாது ஏழு வகைப்படும். அதாவது ராசா, ரக்தா, மம்சா, மேதா, ஆஸ்தி, மஜ்ஜா மற்றும் சுக்ரா போன்ற ஏழு வகைகள் சேர்ந்து சப்ததாது என்று அழைக்கப்படுகிறது.

தாது பொதுவாக உடலில் உள்ள திசுக்களுடன் இணைக்கப்படுகிறது. இவை தான் உடலின் கட்டமைக்கு முதன்மையான விஷயம் ஆகும். இதில் ஏழு தாதுக்களில் ஆஸ்தி தாது(எலும்பு) உடலுக்கு உறுதியான வடிவமைப்பை தருகிறது. நிலம் மற்றும் காற்று இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆஸ்தி தாது ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

அந்த வகையில் பார்க்கும் போது நில உணவுகளான காளான், பீட்ரூட் மற்றும் நிலத்துக்கு அடியில் இருக்கும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. அதே நேரத்தில் நெருப்பு நம்முடைய செரிமான ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சரியாக செரிமானம் அடையாவிட்டால் உடலில் நச்சுக்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

கீல்வாதம் மற்றும் தசைவலி போன்றவை விட்டமின் டி பற்றாக்குறையுடன் தொடர்புடையது. வாத தோஷம் உடையவர்களுக்கு இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கு நீங்கள் எண்ணெய் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அவர்கள் வறண்ட முடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்கிறது ஆயுர்வேதம்.

விட்டமின் டியை பெருவதில் சூரியக் கதிர்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது எப்படி நடக்கிறது என்றால் சருமத்தில் காணப்படும் 7-டீஹைட்ரோகொலஸ்டிரால், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா பி ஒளியுடன் இணைந்து உடலில் வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. ஆயுர்வேதத்தின் படி விட்டமின் டி சத்தை பெற மற்றொரு வழி வளமான பால் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் விட்டமின் டியை பெற கல்லீரல் ஆரோக்கியமும் முக்கியம். ஏனெனில் கல்லீரல் தான் விட்டமின் டி3யை விட்டமின் டியாக மாற்றுகிறது. விட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின் ஆகும். இந்த கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்கள் எலும்பு ஆரோக்கியம், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் இரத்தம் உறைதல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எனவே இந்த விட்டமின்களை உறிஞ்ச நம்முடைய செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது. வாதம், பித்தம் மற்றும் கப தோஷத்தில் சமநிலையின்மை ஏற்பட்டால் செரிமான பிரச்சினை முதல் ஏகப்பட்ட உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே விட்டமின் டி பற்றாக்குறையை போக்க செரிமான ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். பால், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் காளான் போன்றவை விட்டமின் டி நிறைந்த உணவுகளாகும்.

சூர்ய நமஸ்காரம்

விட்டமின் டி யை பெற காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்ய ஆயுர்வேதம் கூறுகிறது. காலை மற்றும் மாலை வேளைகளில் வெளியே செல்வது சூரிய ஒளியை பெற உதவி செய்யும். அதனால் தான் நம் முன்னோர்கள் காலையில் எழுந்ததும் கடவுளை நோக்கி வழிபட்டு சூரிய நமஸ்காரம் செய்ய வலியுறுத்தினர்.

நெய் அல்லது நல்லெண்ணெய்

உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரம் சூரிய ஒளியில் இருக்க வலியுறுத்தினர். உடலில் உள்ள ஒன்பது திறப்புகளான கண்கள், வாய் மற்றும் காதுகளில் நெய் அல்லது எண்ணெய்யை அப்ளே செய்வதோ அல்லது ஒரு வாரத்திற்கு ஒருமுறை நெய் சாப்பிடுவது நல்லது என ஆயுர்வேதம் கூறுகிறது. இப்படி செய்வது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.

எனவே மேற்கண்ட வாழ்க்கை முறை மாற்றங்களை செய்வதன் மூலம் விட்டமின் டி பற்றாக்குறையை போக்க முடியும் என ஆயுர்வேதம் கூறுகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment