குறைந்த விலையில் புதிய Mi 20000mAh Hypersonic பவர் பேங்க் அறிமுகம்!
சியோமி நிறுவனம் Mi ஹைப்பர்சோனிக் பவர் பேங்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமில்லாமல் லேப்டாப்கள் உட்பட அனைத்து தயாரிப்புகளுக்குமான சரியான பாஸ்ட் சார்ஜிங் தீர்வாக இது இருக்கும் என்றும் சியோமி நிறுவனம் கூறுகிறது.
இந்த புதிய பவர் பேங்க் 20,000 எம்ஏஎச் பேட்டரி திறனுடன் வருகிறது. மேலும் இதன் பெயர் குறிப்பிடுவது போலவே இது பாஸ்ட் சார்ஜ் செய்யும் திறனுடன் வருகிறது மற்றும் 50W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்கை வழங்குகிறது.
இந்த புதிய அறிமுகத்தின் மூலம், சியோமி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது Mi வரம்பின் கீழ் உள்ள பவர் பேங்க்களை விரிவுபடுத்தியுள்ளது. நினைவூட்டும் வண்ணம், சியோமி ஏற்கனவே Mi சீரிஸ் மற்றும் ரெட்மி தொடரின் கீழ் பவர் பேங்குகளை விற்பனை செய்து வருகிறது. அவைகள் 10,000mAh மற்றும் 20,000mAh பேட்டரி திறன்களில் வருகின்றன.