விடுதலைப் புலிகளின் சின்னத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை: NIKE நிறுவனம்!

Date:

பிரபல காலணி உற்பத்தி நிறுவனமான NIKE சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னம் தாங்கிய காலணி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காட்சிகள் போலியானவை, அந்த வீடியோவில் சித்தரிக்கப்படுவது NIKE ஆல் தயாரிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

NIKE சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு ஜோடி காலணி தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து வெளிவிவகார அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்தது.

வெளிவிவகார அமைச்சகத்தின் தகவல் படி, வீடியோவில் சித்தரிக்கப்பட்ட காலணிகள் NIKE ஆல் தயாரிக்கப்படவில்லை என்பதை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியது.

அறிவுசார் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததை கண்டறிந்து நிறுவன நடைமுறையின்படி பொருத்தமான நடவடிக்கையெடுப்பதாக NIKE நிறுவனம் பதிலளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்