27 C
Jaffna
December 18, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

நபிகள் பற்றிய பதிவிற்கும் எனக்கும் தொடர்பில்லை; என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளும் சூழ்ச்சி: காரைதீவு தவிசாளர்!

என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே இது. எனக்கும் நபிகள்நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

குறித்த ஊடகமாநாடு (30)பிற்பகல் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் கூறியதாவது,

கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர். அவரை அவமதித்ததாக என்னைத் தொடர்புபடுத்தி முகநூலில் சில பிரகிருதிகள் படுகேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

போலி முகநூல் பதிவை எனது பெயரில் பதிவிட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை. ஆனால் இறைதூதரின் பெயரைப் பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன்.

வெறும் அரசியலுக்காக அந்த மாமனிதரை கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனானாலும் பொதுவெளியில் இவ்வாறு அவமானப்படுத்தப்படக்கூடாது.

தாயின் காலடியில் சுவர்க்கத்தைக் காணலாம் என்றார் அவர் . அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறோம் நாம். தாயின் மகத்துவத்தை அனைத்து சமயங்களும் உயர்நிலையிலேயே வைத்து போற்றுகின்றன. அதுபோல சகல சமயங்களும் போதனைகளும் மனிதர்களை புனிதனாக்கவே நல்வழிப்படுத்துவதற்காகவே தோற்றம்பெற்றன.

சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனைய மதங்களை மதித்து நடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள். இனஜக்கியத்துடன் செயற்படுபவர்கள்.

இன மதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவன் நான். இரு இனங்களுக்கும் தலைவனாக இருக்கின்ற நான் இறைதூதரைப்பற்றி விமர்சிப்பேனா? சாதாரண சிறுகுழந்தைக்கும் இது விளங்கும்.

எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள். எங்களை என்ன வேணுமென்றாலும் ஏசுங்கள், தூற்றுங்கள். ஆனால் இறைதூதரை இறைவனை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன தெரிவு!

Pagetamil

‘ரஷ்யாவிற்கு சென்றது திட்டமிட்ட நிகழ்ச்சியல்ல’: சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்

Pagetamil

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

Leave a Comment