இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனுஷ்க குணதிலகா, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மூன்று வீரர்களுக்கும் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு வருடமும், உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஆறு மாதங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மூவரும் தலா 10 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த வேண்டும்.
இந்த ஆண்டு தடைக்கு பிறகு ஏதேனும் குற்றங்கள் செய்தால் எதிர்காலத்தில் இரண்டு வருட சர்வதேச தடையை விதிக்கப்போவதாகவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
மூன்று வீரர்களும் இலங்கை கிரிக்கெட் பரிந்துரைத்த மருத்துவரின் கீழ் ஆலோசனை சேவை பெற வேண்டும்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது உயிர்க்குமிழி பாதுகாப்பு நடைமுறையை மீறி இரகசியமாக ஹொட்டலை விட்டு வெளியேறியதையடுத்து, இந்த மூன்று வீரர்களும் நேற்று ஒழுக்காற்று குழுவில் முன்னிலையாகினர். ஒழுக்காற்று குழுவின் பரிந்துரையை தொடர்ந்து இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.