கமல் முன்னிலையில் காதலியை மணந்தார் சினேகன்!

Date:

உலக நாயகன் கமல் ஹாசன் முன்னிலையில் தன் காதலியான நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார் பாடலாசிரியர் சினேகன். அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாடலாசிரியரும், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காதலை வீட்டில் தெரிவித்து அனுமதி பெற்றனர்.

கமல் ஹாசன் முன்னிலையில் இன்று அவர்களின் திருமணம் நடந்தது. திருமணத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. சினேகன், கன்னிகா ரவி சந்தோஷமாக வாழ வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக சினேகனும், கன்னிகாவும் சேர்ந்து போட்டோஷூட்டில் கலந்து கொண்டார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சினேகனை விட கன்னிகா ரவி 16 வயது சிறியவர். இதையடுத்து வயது வித்தியாசத்ததை வைத்து சமூக வலைதளங்களில் விமர்சித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்