நடமாடும் தடுப்பூசி ஏற்றம் பணிகள் கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலயைில் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரியும் 88வது வயதில் இன்று சினோபாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.
நேற்று முதல் வயது முதிர்ந்தவர்கள், நடமாட முடியாதவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்புார் உள்ளிட்டோருக்கு நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் வைத்திய அதிகாரி சரவணபவனின் நேரடி கண்காணிப்பின் கீழ் குறித்த பணிகள் முன்னெடு்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், குறித்த நடமாடும் தடுப்பூசி செலுத்தும் சேவை ஊடாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்துவதற்காக கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 9 இடங்களிலும், நடமாடும் தடுப்பேசி ஏற்றும் வேலைத்திட்டம் ஊடாகவும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்ற வருகின்றது.
30 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கும் குறித்த தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள் இடம்பெறுகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடமாடும் சேவை ஊடாக 88 வயதுடைய வீ.ஆனந்தசங்கரி தடுப்பூசியை கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பெற்றுக்கொண்டார்.