அதிக வெய்யிலால் சருமம் பொலிவிழக்கிறதா! இதோ டிப்ஸ்.

Date:

பெண்களே வெய்யிலால் உங்க சருமம் பாதிப்படைக்கிறதா?

கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், தொடக்கத்திலேயே வெய்யில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பொதுவாக சூரியனின் புறஊதாக் கதிர்கள் சருமத்தை மோசமாக பாதிக்கக்கூடியது. இந்த புறஊதாக் கதிர்கள் சருமத்தின் நிறத்தை கருமையாக்குவதோடு மட்டுமின்றி, சரும புற்றுநோயை உண்டாக்கும் அளவில் மோசமானது. இந்த புறஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதற்கு கடைகளில் ஏராளமான சன் ஸ்க்ரீன் லோஷன்கள் விற்கப்படுகின்றன.

கெமிக்கல் நிறைந்த சன் ஸ்க்ரீன் லோஷன்களை சருமத்திற்கு பயன்படுத்தும் அதே வேளையில் இயற்கை வழிகளையும் மேற்கொண்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதேடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, சூரியனால் சருமம் எப்படி கருமையாகிறது தெரியுமா? சூரிய கதிர்கள் சருமத்தில் படும் போது, சருமமானது புறஊதாக் கதிர்களை உறிஞ்சுவதற்கு அதிக மெலனினை வெளியிடுகிறது. இதன் விளைவாகவே வெய்யிலில் சுற்றினால் சருமம் கருமையாகிறது.

சரி, இப்போது வெய்யிலால் சருமம் கருமையாவதைத் தடுக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.

முட்டைக்கோஸ்

பச்சை இலைக் காய்கறிகள் இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். அதற்கு முட்டைக்கோஸ் இலைகளை அரை மணிநேரம் குளிர் சாதன பெட்டியில் வைத்து, பின் அந்த இலைகளை சருமத்தின் மீது தினமும் பதினைந்து நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு சிறப்பான மாற்றத்தைக் காணலாம்.

தயிர்

வெளியே வெய்யிலில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், சருமத்தில் தயிரைத் தடவினால், சருமத்தில் உள்ள கருமை மாயமாய் மறையும். அதற்கு குளிர்ச்சியான தயிரை வெய்யில் படும் இடங்களான முகம், கை மற்றும் கால்களில் தடவ வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாலே ஒரு நல்ல பலன் தெரியும்.

கற்றாழை

கற்றாழை சருமத்தில் உள்ள மெலனின் அளவைக் கட்டுப்படுத்தி, சரும கருமையைக் குறைக்க பெரிதும் உதவும் ஒரு அற்புதமான பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் தடவி ஊற வைத்து வந்தால், சருமத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடும் பட்டுப்போன்றும் இருக்கும்.

சுரைக்காய் சாறு

சுரைக்காய் சாறு வெய்யிலின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்பட்ட கருமையைப் போக்கும் திறன் கொண்டது. அதற்கு சுரைக்காயின் சாற்றினை சருமத்தில் ஒரு நாளைக்கு 3-4 முறை தடவி ஊற வைத்து கழுவி வர வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள கருமை நீங்குவதை நன்கு காணலாம்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்