நாட்டில் மேலும் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 301,272 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,499 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதன்படி, 271,855 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 23,842 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று வரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,195 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




