இலங்கை- இந்திய அணிகளிற்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று (28) இடம்பெறும்.
நேற்று இந்த போட்டி நடைபெறவிருந்த போதும், இந்திய வீரர் குர்ணல் பாண்டியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், இரண்டு அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்திய வீரர்கள் 8 பேர் பாண்டியாவுடன் நெருக்கமாக பழகியிருந்தனர்.
அனைவரிடமும் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லையென்பது தெரிய வந்ததையடுத்து, இன்று இரண்டாவது ரி20 போட்டி நடக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1