இளம் பெண்ணோடு உல்லாச வாழ்க்கை… தாயாக்கி விட்டு தவிக்க விட்ட முன்னாள் எம்.எல்.ஏவின் மருமகன்!

Date:

திருமணம் செய்து கொள்வதாக தாயாக்கி விட்டு பெண் தொழிலதிபதிபரை ஏமாற்றிய முன்னாள் எம்.எல்.ஏவின் மருமகன் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தை சேர்ந்த சிந்துஜா(34) தொழிலதிபரான இவர் முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகனான அருண் பிரகாஷ், கோவை தங்கம் உட்பட 5 நபர்கள் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிந்துஜா-

கோவை நவஇந்தியா அருகே சாக்லேட் பேக்டரி வைத்து நடத்தி வருவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு பி.எஸ்.ஜி நிறுவன உரிமையாளருடன் தனக்கு திருமணம் நடந்து விவகாரத்து ஆகியிருப்பதாக அவர் கூறினார்.

முன்னாள் கணவரின் அலுவலகத்தில் பணிப்புரிந்த அருண் பிரகாஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் பழகி வந்ததாகவும், நாளடைவில் தனியாக குடும்பம் நடத்தி இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்ததாக அவர் கூறினார். இதனை நம்பி அருண் பிரகாஷிற்கு சுமார் 7 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், 3 கார்கள் தனது பெயரில் லோன் வாங்கி கொடுத்தேன் என தெரிவித்தார்.

நாளடைவில் அருண்பிரகாஷ் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததால் தனக்கு சந்தேகமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது முன்னாள் எம்.எல்.ஏ கோவை தங்கத்தின் மருமகன் எனக்கூறி மிரட்டி வெளியே சொன்னால் தனது ஆபாச படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருவதாகவும் அருண் பிரகாஷ் மிரட்டினார். மேலும் கோவை தங்கம், அவரது மகள், அருண் பிரகாஷ் ஆகியோர் அடியாட்களுடன் வந்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தாக்கிவிட்டு சென்றதாக அவர் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து புலியகுளம் காவல் நிலையத்தில் தான் புகார் அளித்த போது அருண் பிரகாஷை வரவழைத்து விசாரணை நடத்திய போது தான் செய்ததை ஒப்புகொண்டு தனக்கு 1.5 கோடி ரூபாயை 1வருடத்தில் தருகிறேன் என ஒப்புகொண்டார்.

இதனையடுத்து அடுத்த நாளே கோவை தங்கம் தனது அடியாட்டுகளுடன் வழக்கை வாபஸ் வாங்குமாறு தன்னை மீண்டும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி சென்றனர்.இதனால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய கோவை தங்கம், அருன் பிரகாஷ், உட்பட 5 நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு அளிக்ககோரி புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்