மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது, குறைந்த வயதுடையவர்களை வீடுகளில் வேலைகளுக்காக அமர்த்திய உரிமையாளர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமூக பொலிஸ் பிரிவு, குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகம் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1