இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுளார்.
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணவன் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சநகேகிக்கப்படும் இருவர் அந்தக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
ஆயினும் குறித்த இருவரும் நீதிமன்ற வழக்கு தவணைகளில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியிருந்தனர்.
அவர்களில் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
11 வருடங்களின் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1