26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
மலையகம்

ஹிஷாலினி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்தபோது தீக்காயங்களுக்கு உள்ளாகி  உயிரிழந்த சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ள டயகம தோட்டத்தின் பொது மயானத்திற்கு இன்று (27) முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அக்கரபத்தனை –  டயகம தோட்டத்தைச் சேர்ந்த ஹிஷாலினி ஜுட் குமார் (16) கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பலத்த தீக்காயங்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அந்தவகையில், நேற்றைய தினம் ஹிஷாலினியின் பெற்றோர்கள் கொழும்பில் உள்ள மனித உரிமை திணைகளத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்தனர்.

இவ் முறைப்பாட்டில் தனது மகளுக்கு பல்வேறு அநீதிகள் இடம்பெற்றதாகவும், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உடலை மீண்டும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என தனது முறைபாட்டில் பதிவு செய்துள்ளார்.

சம்மந்தப்பட்ட சிறுமியின் விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது.

இதன்போது நீதிபதி ஹிஷாலினியின் சடலத்தை  மீண்டும் தோண்டி எடுக்க உத்தரவிட்டார்.

இதற்கமைய இன்றைய தினம் மேலும் பல்வேறுப்பட்ட தகவல்களை திரட்டும் வகையில் கொழும்பு வடக்கு பிரதேச குற்ற புலனாய்வு பிரிவு மற்றும் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர், டயகம பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட குழு விசேட விசாரணைகளை மேற்கொண்டனர்.

நல்லடக்கம் செய்யப்பட்ட ஹிஷாலினியின் சடலத்தை எதிர்வரும் தினங்களில் தோண்டி எடுக்கப்படும் என டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ஹட்டன் கொட்டகல வைத்திய சாலையில் இறந்தவரை இனங்காண பொலிஸ் உதவி கோரல்

east tamil

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

Leave a Comment