பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகரப்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி சூட்சமமான முறையில் கூலர் வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக கால்நடைகள் ஏற்றி வந்தவர் (27) இன்று மாலை பளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இருந்து அனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக 08நாம்பனும் 01 பசுவும் உள்ளடங்களாக 09 கால்நடைகளை கூலர் வாகனத்தில் ஏற்றி வருவதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பளை நகரப்பகுதியில் வைத்து குறித்த வாகனத்தை பளை பொலிசார் பரிசோதித்த வேளை கால்நடைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் நாளை (28)அவர் கிளிநொச்சி மாவட்ட நீதாவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவத்திருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1