மாலைசந்தை பிள்ளையார் ஆலயத்தில் திருவிழாவில் கலந்து கொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 4 பேருக்கான பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகாத நிலையுடன்? இன்று ளெியான முடிவுகளின் அடிப்படையில் ஏனைய மூருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது.
ஆலயத்தில் திருவிழா காலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்டமை பலரின் முகநூல் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட போதிலும் கடந்த சனிக்கிழமை 79 பேருக்கே PCR மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 4 பேரினது முடிவுகள் மட்டும் வெளியாகாத நிலையில் இருந்தது ஏனையோருக்கு தொற்று ஏற்படவில்லை எனவும் முடிவுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 பேரின் முடிவுகளும் இன்று வெளியாகின. இதில் ஆலயத்தில் திருவிழா காலங்களில் தொண்டு செய்கின்ற பெண் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, பருத்தித்துறையில் முடக்கப்பட்ட பகுதியை விடுவிக்கும் நோக்கத்துடன் அந்த பகுதிகளில் இன்று 395 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் 11 பேருக்கு தொற்று உறுதியானது.