பிசிஆர் பரிசோதனையின்போது வேதனை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பிக்கு, பரிசோதனை மேற்கொண்ட தாதியை பீங்கானினால் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த தாதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிலாபம், ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் கொவிட் பிரிவில் பணியாற்றிய தாதியொருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சல் மற்றும் தடிமன் காரணமாக ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிக்குவுக்கு குறித்த தாதியினால் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, தனக்கு வலி ஏற்பட்டதாக கூறி, அருகிலிருந்த கண்ணாடி பீங்கானைக் கொண்டு தாதியை தாக்கியுள்ளார் பிக்கு.
காயமடைந்த தாதி சிகிச்சைகளுக்காக அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாதியை தாக்கிய பிக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்