துனிசியாவின் பிரதமர் ஹிச்சாம் மெச்சிச்சியை தனது பதவியில் இருந்து நீக்குவதற்கும், பாராளுமன்றத்தை முடக்குவதற்கும், அனைத்து பிரதிநிதிகளின் பாராளுமன்ற சிறப்புரிமையை நிறுத்துவதற்கும், துனிசியாவின் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
துனிசியாவின் பல நகரங்களில் வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்த முடிவிற்கு ஜனாதிபதி வந்துள்ளார்.
ஒரு புதிய பிரதமரின் உதவியுடன் நிறைவேற்று அதிகாரத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று அவர் மேலும் கூறினார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை துனீசிய இஸ்லாமியக் கட்சியான என்னாடாவின் தலைமையகத்தை டோஜூர், கைரூவான் மற்றும் சூஸ்ஸில் பகுதி ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதால் கொந்தளிப்பான நிலைமையேற்பட்டது. பல துனிசிய பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். கோபமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கவச வாகனத்தை எரித்தனர்.
2011 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கத் தவறியதால் நாட்டின் மோசமான பொருளாதார, சமூக மற்றும் சுகாதார நிலைமைகளுக்கு என்னாடா கட்சி பொறுப்பேற்க வேண்டுமென துனிசியர்கள் வலியுறுத்துகின்றனர்.