கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு விளக்கமளிக்கும் பட்டறை அடுத்த மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் என்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த பட்டறைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் தவறான அறிக்கைகளை வெளியிடுவதால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சில புரிதல்களை வழங்குவதற்காக இந்த பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.




