நாட்டின் மேலும் 14 இடங்களில் டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்ட மேலும் 30 புதிய தொற்றாளர்கள் அடைாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியா, முல்லைத்தீவு, கோட்டை, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மஹாபகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலாரன, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ள போன்ற பகுதிகளில் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.
“அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 ஆக இருந்தாலும், சமூகத்தில் கண்டறியப்படாத இதுபோன்ற தொற்றாளர்கள் அதிகமாக இருக்கலாம்” என்று சுகாதார சேவைகள் திணைக்கள துணை ப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.




