பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் 16 வயது சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரிஷாத் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று நபர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ரிஷாத் பதியுதீனின் மனைவி, அவரது உறவினர் மற்றும் வீட்டில் பணிபுரிந்த சாரதி ஆகியோரிடமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சிறப்பு பொலிஸ் குழு ஒன்று இன்று வீட்டிற்கு சென்று சிறுமி தங்கியிருந்த அறை உள்ளிட்ட பகுதிகளை ஆராய்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் உட்பட 15 பேரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.




