யாழில் வர்த்தக நிலையம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையினர் (CCTV)

Date:

கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வாள் ஒன்றும் வன்முறை சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி சந்திப் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் புடவை கடை ஒன்றுக்கு பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் மூலம் தீ மூட்டப்பட்டது.

இந்த சம்பவம் இரவு 8 45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வாள்கள் மற்றும் பெற்றோல் குண்டு சகிதம் கடைக்குள் புகுந்து இந்த நாசகார செயலைச் செய்துள்ளனர். இதன்போது கடையில் இருந்த புடவைகள் மற்றும் நேற்று கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புடவைகள் உட்பட பல லட்சம் ரூபாய் சொத்து தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் கைக்கூலிகள் மூலம் வைத்து செய்யப்பட்டிருக்கலாம் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

வெறொரு  புடவைக்கடை உரிமையாளருக்கும், தாக்குதலிற்குள்ளான கடை உரிமையாளருக்குமிடையில்  குறைந்த விலைக்கு பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில்  மனஸ்தாபம் ஒன்று ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வன்முறை சம்பவம் இடம்பெற்றதா என்பதையும் பொலிசார் ஆராய்கிறார்கள்.

கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்