27.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவு முகாம் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட படையினருக்கு அஞ்சலி!

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1996 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒயாத அலைகள்1 தாக்குதலில் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கொல்லப்பட்ட 1169 படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கபட்டுள்ளது.

நேற்று மாலை (18) 5.00 மணிக்கு இந்தநிகழ்வு இடம்பெற்றது.

1996 ஆம் ஆண்டு ஜூலை 18,19 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில்  உயிரிழந்த 1169 படையினர் நினைவாக முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள படையினரின் நினைவுத்தூபியில் 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இலங்கை இராணுவப்பிரிவின் சிங்கறெஜிமன்ட், விஜயபாகு றெஜிமென்ட் படைப்பிரிவினை சேர்ந்த படைவீரர்களே 1996 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள்.

அவர்கள் நினைவாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் நினைவு தூபி அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் நினைவு நிகழ்வு நடைபெறுவது வழமை
2010 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய உள்ளிட்ட படைத்தபளபதிகள் அதிகாரிகள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

இதன்போது கொக்குளாய் விகாரையின் விகாராதிபதியினால் உயிரிழந்த படைவீரர்களுக்காக பிரித்ஓதி தானம் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு தாக்குதலில் உயிரிழந்த சிப்பாயொருவரின் மகன் தற்போது ஒரு இராணுவ அதிகாரியாக அந்த இடத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

east tamil

தோட்டத் தொழிலாளருக்கு ரூ.2000 அடிப்படை சம்பள உயர்வு கோரிக்கை: மனோ கணேசன் எம்.பி

east tamil

பச்சையரிசி மற்றும் தேங்காய் விலை குறைப்புக்கான கோரிக்கை – இராதாகிருஸ்ணன்

east tamil

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

Leave a Comment