முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தில், தவறான ஆள் அடையாளத்தில் திருச்சி வேலுச்சாமி தகவல் வெளியிட்டு வருவதை, தமிழ் தேசிய கட்சியின் தலைவர், மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி, தமிழ் பக்கத்தில்- ராஜீவை புலிகள் கொல்லவில்லை; ரெலோ, தந்தை செல்வாவின் மகனிலேயே சந்தேகம்: புதிய குண்டைப் போடும் காங்கிரஸ் பிரமுகர்! என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது.
அதில், ராஜீவ் காந்தி கொலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு தொடர்பில்லை. ரெலோ அமைப்பின் சிறிகாந்தா, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசனிற்கே அந்த கொலையில் தொடர்பிருந்தது. இந்த கொலையின் பின்னர் இருவருக்கும் சி.ஐ.ஏயினால் பெருமளவு பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுச்சாமி தெரிவித்ததை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
இதையடுத்து, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தொலைபேசி வழியாக தமிழ்பக்கத்தை தொடர்பு கொண்டு, விளக்கமளித்தார்.
தவறான ஆளடையாளத்தின்அடிப்படையில், திருச்சி வேலுச்சாமி தகவல் வெளியிட்டு வருவதை சுட்டிக்காட்டினார்.
அத்துடன்,தமது தரப்பு விளக்கமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த விளக்கம் கீழே-

