2020 ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் நடுவராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் தகுதி பெற்றுள்ளார்.
இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள பெண் தலைமை காவலர் நெல்கா ஷிரோமலா . 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டில், பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய போட்டியில் பங்கேற்ற முதல் பெண் பொலிஸ் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெற்றார்.
2009 ஆம் ஆண்டில் முதல் இலங்கை பெண் குத்துச்சண்டை நடுவர் ஆனார். 2011 ஆம் ஆண்டில் முதல் வகுப்பு சர்வதேச குத்துச்சண்டை நடுவராக உயர்வு பெற்றார். மேலும் 2011 ல் சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையை பெற்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1