முக்கியச் செய்திகள் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி நடுவராக இலங்கைப் பெண்!

2020 ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் நடுவராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் தகுதி பெற்றுள்ளார்.

இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள பெண் தலைமை காவலர் நெல்கா ஷிரோமலா . 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டி நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காலி ரிப்பன் பெண்கள் கல்லூரி மாணவியான இவர், 1997 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இணைந்தார்.

2001 ஆம் ஆண்டில், பொலிஸ் விளையாட்டுக் கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய போட்டியில் பங்கேற்ற முதல் பெண் பொலிஸ் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2009 ஆம் ஆண்டில் முதல் இலங்கை பெண் குத்துச்சண்டை நடுவர் ஆனார். 2011 ஆம் ஆண்டில் முதல் வகுப்பு சர்வதேச குத்துச்சண்டை நடுவராக உயர்வு பெற்றார். மேலும் 2011 ல் சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் பெண் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையை பெற்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Pagetamil

மாகாண வைத்தியசாலைகளை பறிப்பது அரசியலமைப்பிற்கு முரண்; ஆனால் தடுக்கும் பலம் என்னிடமில்லை: கைவிரித்தார் டக்ளஸ்!

Pagetamil

மணிவண்ணன் பிணையில் விடுதலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!