24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
கிழக்கு

பெருநாள் கொள்வனவுகளை கடைசிவரை காத்திராமல் நேரகாலத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் : சம்மாந்துறை கொரோனா செயலணி

சம்மாந்துறை பிரதேச கொரோனா பாதுகாப்பு செயலணி கூட்டம் ஹஜ்ஜுப் பெருநாள் கொத்தணி ஒன்று உருவாகாமல் தடுக்கும் நோக்குடன் சம்மாந்துரை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் சனிக்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கொரோனா தொற்று நோயிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் தற்போது நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தெற்றிலிருந்து தம்மைத் தற்காத்து தெற்றைத் தடுக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், பொலிஸ் நிலையம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் இலங்கை இராணுவத்தினர் கூடி   தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு அவற்றை கட்டாயம் கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தீர்மானங்களாக அனைத்து விடயங்களிலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார வழிமுறைகளைப் பேணி நடப்பதுடன் பெருநாள் கொள்வனவுகளை கடைசிவரை காத்திராமல் கால நேரத்தோடு முடித்துக் கொள்ளுமாறும், பெருநாள் தொழுகையை முஸ்லிம் சமய திணைக்களத்தின் வழிகாட்டலுக்கமைவாக பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர் சபையின் திட்டமிடலை பின்பற்றி 100 பேருக்கு மேற்படாத வகையில் நடைமுறைப்படுத்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும். என்பதுடன் குடும்ப ஒன்றுகூடல்களை மிக நெருக்கமானவர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்வதுடன் பொதுமக்கள்  அனைவரும் மற்றவர்களுக்கு கொரோணா வைரஸை பரப்பிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்துமாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் திருமண வீடுகள் மற்றும் மரண வீடுகளுக்கு சமூகமளிக்கின்ற அனைவரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றச் செய்வது முக்கிய கடமை என்பதை உணர்ந்து செயற்படுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

east tamil

மடத்தடி ஸ்ரீ கிருஷ்ண பகவான் ஆலய மஹா கும்பாபிஷேகம்

east tamil

இலங்கைத்துறை முகத்துவாரத்தில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு

east tamil

மாடு மேய்க்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Pagetamil

ஆளுநர் புல்மோட்டைக்கு திடீர் விஜயம்

east tamil

Leave a Comment