29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் தலைமையில் 2021 ஜூலை 15ஆந் திகதி நடைபெற்ற பங்குதாரர் சந்திப்பொன்றில், நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்தியது.

ஆசியாவில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்த முதல் நாடாக இலங்கை அமைவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தின் தாராள ஆதரவைப் பெறாவிட்டால் அது சாத்தியமானதாக அமைந்திருக்க முடியாது.

முடக்கநிலை, தொலைநிலை வேலை மற்றும் மெய்நிகர் மாநாடுகளின் மயமான இந்த புதிய யுகத்தில், உலகளாவிய டிஜிட்டல் தகவல் தொடர்புகளை நம்பியிருக்கின்றமை வியத்தகு வகையில் வளர்ந்துள்ளது, எனினும் அந்தத் தரவுகளை அனுப்புவதற்கு செயற்கைக்கோள்கள் தான் காரணம் என பெரும்பாலான மக்கள் இன்னும் தவறாகக் கருதுகின்றனர். உண்மையில், அனைத்து சர்வதேச டிஜிட்டல் தரவு மற்றும் தகவல் தொடர்புகளில் 99% க்கும் மேற்பட்டவை உலக சமுத்திரங்களில் 1.8 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்டுள்ள 400 க்கும் மேற்பட்ட கேபிள்களின் வலையமைப்பினுடாக பரிமாற்றப்படுகின்றன.

2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரல் மாதத்தில் முடக்கநிலை ஆரம்பமான காலப்பகுதிக்கு இடையில் இணையப் பாவனை நெரிசல் 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளதுடன், இது ‘புதிய இயல்பு’ நிலைக்கு ஏற்ப மேலும் தொடரும் என சர்வதேச கேபிள் பாதுகாப்புக் குழு மதிப்பிடுகின்றது. 2020 ஜூலை 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் ஸூம் வீடியோ தொடர்பாடல் மூலமான வருமானம் முந்தைய ஆண்டை விடவும் 355% ஆல் அதிகரித்துள்ளது. பரவலான தொலைநிலை வேலை, தொலைநிலைக் கல்வி மற்றும் தொலைநிலை தனிப்பட்ட வீடியோ தகவல் தொடர்புகளின் விளைவாக அதிகரித்துள்ள வீடியோ மாநாட்டு நிலையின் அறிகுறியொன்றே இதுவாகும்.

இந்த உலகளாவிய வலையமைப்பில் எமது நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, அது முடிந்தவரை நெகிழ்ச்சியுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

தொடக்கக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கையின் நியாயாதிக்கத்தில் பல கேபிள்களைக் கொண்டிருப்பதன் அச்சுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்டதன் மூலம், இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் விரிதிறனை வழங்குவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் குறித்த தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம் மற்றும் குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் போன்ற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கை பணியாற்றி வருவதாக எடுத்துரைத்தார்.

சர்வதேச சட்டத்தின் கீழ், கேபிள்களின் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இந்த கேபிள்களால் சேவை செய்வதற்கான அரசுகளின் பொறுப்பை எடுத்துக்காட்டும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தை (A/RES/73/124, 2018 டிசம்பர் 13) போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. கைட்லின் மெரிடித் குறிப்பிட்டார். ‘இலங்கையின் தேசியக் கட்டமைப்பின் அபிவிருத்தியிலும், கடல்சார் பாதுகாப்புத் துறையிலும் இன்னும் விரிவாக இலங்கையின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மதிப்பிடுவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இலங்கையுடனான தொடர்ச்சியான கூட்டாட்சியை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறந்த சில நடைமுறைகள் மற்றும் பாடங்களை பரந்த பிராந்தியத்திற்கு பரப்புவதற்குத் தொடங்குகின்றது’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் குறித்த கட்டமைப்பை உருவாக்கும் பணிகள், குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ச்சியான மெய்நிகர் ஆலோசனைகளினாலான பங்குதாரர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்த செயன்முறை 2020 செப்டம்பரில் தொடங்கியது. குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சிறந்த நடைமுறைகளை இந்தக் கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது.

கட்டமைப்பின் தொடக்கத்தில், கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளரும், பிரதி தூதரகத் தலைவருமான திரு. கிடமுரா தோஷிஹிரோ, ‘வணிக மற்றும் நிதி மையமாக அபிவிருத்தியடைவதற்கான இலங்கையின் அபிலாஷைகளை தேசிய் கட்டமைப்பானது நிச்சயமாக ஒருங்கிணைக்கும் அதே வேளை, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ இல் திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாகவும் இருக்கும்’ எனக் குறிப்பிட்டார். ‘போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடன் நெருங்கிய கூட்டுறவில், தேசியக் கட்டமைப்பை உருவாக்குவது இலங்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுவதுடன், இந்து சமுத்திரத்தில் இது ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஃபைபர்-ஒப்டிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாப்பதற்காக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இணங்க இலங்கையில் ஒரு வலுவான மற்றும் நெகிழக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். ‘முற்போக்கான தேசிய நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பொன்றை செயற்படுத்துவதற்காக இந்த முயற்சி இப்போது உதவும் அதே வேளை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்த பார்வையை மேலும் வலுப்படுத்துவதோடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இலங்கையை நிலைநிறுத்தும்’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்து சமுத்திரத்தில் ஒரு கடல் மற்றும் கப்பல் பரிமாற்ற மையமாக இலங்கையைக் காட்டும் வகையில், கட்டமைப்பில் மற்றும் செயற்பாட்டில் உள்ள சட்டங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த உருவத்திற்கு மேலும் பங்களிக்கும்.

இந்த செயற்பாட்டில் வெளிநாட்டு அமைச்சின் வகிபாகம் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புக்களை இலங்கை நிறுவனங்களுடன் இணைப்பதும் இலங்கை கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும் என வெளிநாட்டு அமைச்சின் சமுத்திரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க விளக்கினார். நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை ‘சிக்கலான உட்கட்டமைப்பாக’ அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.

இந்த செயற்பாட்டில் இலங்கை பெற்ற அனுபவம் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், அதில் இலங்கை இந்த ஆண்டின் துணைத் தலைமையாக பொறுப்பேற்பதுடன், பின்னர் 2023 முதல் 2025 வரை தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது.

அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் பரிந்துரைகளுடன் வெளியீடு நிறைவடைந்தது.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூலை 18

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment