ரிஷாத் வீட்டில் உயிரிழந்த சிறுமிக்கு நடந்தது என்ன?: திடுக்கிடும் தகவல்!

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டு பணிப்பெண்ணான சிறுமி இஷாலினி ஜூட் குமார் (16) உயிரிழந்த விவகாரத்தில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர.

சிறுமியின் பிரேத பரிசோதனையில், சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதும் தெரிய வந்துள்ளது.

ரிஷாத் பதியுதீனின் மனைவி, அவரது பெற்றோர் மற்றும் அந்த வீட்டில் பணியாற்றும் ஒரு இளைஞனிடம் பொரளை பொலிசார் நீண்ட விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சிஐடியின் காவலில் இருக்கும் ரிஷாத் பதியுதீனும் விசாரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டயகம மேற்கை சேர்ந்த சிறுமி 15 வயது மற்றும் 11 மாத வயதில் பணிப்பெண்ணாக ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முன்னாள் அமைச்சரின் வீட்டு பணிப்பெண், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

டயகம பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்துள்ளார்.

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் 72% தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தார்.

உடலுக்கு தீ வைத்து தற்கொலை செய்வதற்கு ஏதேனும் தீவிரமான காரணங்கள் இருக்க வேண்டும் என்றும், இது குறித்து அவர்கள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிசார் கூறுகின்றனர். சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இறப்பதற்கு முன்னர், சிறுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தேசிய மருத்துவமனையின் மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பதை சொல்லவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஊர்காவற்றுறையில் போதைக்கும்பல் கொடூரம்

ஊர்காவற்றுறை, நாரந்தனை வடக்கு பகுதியில் மதுபோதையில் இருந்த கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு...

பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினரின் கணவர் குத்திக்கொலை

வடமராட்சி கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரின் கணவர் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த...

மன்னார் துப்பாக்கிச்சூட்டு சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்