1978 ஆம் ஆண்டில் அமுலாகிய பயங்கரவாதத் தடை சட்டத்தின் சில சரத்துகளைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பாதுகாப்பு செயலாளர் அடங்கியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கான பரிந்துரைகளை அட்டவணைப்படுத்துவதே இந்த குழுவின் பணியாகும்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் பயங்கரவாதத் தடை சட்டத்தில் திருத்தம் அல்லது இரத்து செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதை செய்யாவிட்டால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நெருக்கடி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இழக்கும்.
இதையடுத்து, பயங்கரவாத தடைச்சத்தில் திருத்தம் செய்வதாக வெளிவிவகார அமைச்சு சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்தது.
தற்போதைய சூழ்நிலைகளில் பொருந்தாத சில சரத்துகளைத் திருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.