29.1 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியின் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி இன்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது.

வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முழுமையான முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் இன்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிாிவு தொிவித்துள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 4 நாட்களில் 4 மற்றும் 6 வயதான சிறுவர் உட்பட 15 போ் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.

மேற்படி 15 போில் 10 போ் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 போ் நேற்றய தினமும், அதற்கு முன்று தினங்கள் தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.

இந்நிலையில் குறித்த பகுதி இன்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏறத்தால 300 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் முடக்கப்பட்டுள்ளனர்.

குறித்த முழுமையான முடக்கம் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும், வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது.

இதேவேளை 9 முக்கிய இடங்களில் இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

மேர்வினுக்கு விளக்கமறியல்… பிரசன்னவுக்கு பிடியாணை!

Pagetamil

வவுணதீவு கொலை சம்பவம் தொடர்பில் தேசிய புலனாய்வு சேவை பொலிஸ்காரர் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!