24.9 C
Jaffna
January 2, 2025
Pagetamil
இந்தியா

கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தில் பாலியல் தொழில்: மத போதகர், 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

பெண்களை வைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட புகாரில் மத போதகர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளையை அடுத்துள்ள எஸ்.டி.மங்காட்டைச் சேர்ந்தவர் லால் ஷைன்சிங் (40). கிறிஸ்தவ மதபோதகரான இவர், தனது வீட்டில் `ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் பிரார்த்தனைக் கூடம் நடத்தி வந்தார்.

இந்தப் பிரார்த்தனைக் கூடத்துக்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து சொகுசு கார்களில் இளம் பெண்களும், ஆண்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி வந்து சென்றனர். தேவாலயத்தில் எவ்வித பிராத்தனைகளும் முறையாக நடைபெற்றதில்லை. பதிலாக அரைகுறை ஆடையுன் இளம் வயது முதல் 50 வயது வரையான பெண்களும், ஆண்களும் அவ்வப்போது காரில் வந்து செல்வதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கும்மேலாக இந்தப் பிரார்த்தனைக்கூடத்தை போலீஸார் இரகசியமாக கண்காணித்தனர்.

நேற்று முன்தினம் இரவு போலீஸார் லால் ஷைன் சிங் சொகுசு பங்களாவில் நடத்தி வந்த தேவாலயத்தில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு பல அறைகளில் பெண்களும், ஆண்களும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த அதிகாரிகள், மத போதகர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த லால் ஷன் சிங் உடன் சேர்த்து இரண்டு பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.

போதகர் லால் ஷைன்சிங், பனங்காலையைச் சேர்ந்த ஷைன், மேக்கோட்டைச் சேர்ந்த ஷிபின் மற்றும் 19 வயது பெண்கள் இருவர் உட்பட 4 பெண்கள் பெண்களை, போலீஸார் கைது செய்தனர். சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, பிரார்த்தனைக் கூடத்துக்கு வெளியூர்களில் இருந்து பெண்களை வரவழைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுவதை ஒப்புக்கொண்டனர்.

அப்பகுதி பெண்களான ராணி, சுகந்தி ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் இளம் பெண்களை இங்கு அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 19 வயதுபெண்கள் இருவரும் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவ்விருவரில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது பெண், பெற்ற தாயால் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது தெரியவந்தது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

Pagetamil

75000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

east tamil

Leave a Comment