முல்லைத்தீவு மாவட்டம், ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை காதலித்து, குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்துவெட்டுவான் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
14 வயது சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த போது, சிறுமியுடன் நட்பாகி காதல் வலை வீசிய இளைஞன், வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
கடந்த 5ஆம் திகதி சம்பவம் நடந்தது.
சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கு தகவல் தெரிய வந்ததையடுத்து, கிராம அமைப்பு ஒன்று பொலிசாருக்கு தகவல் லழங்கியது.
இதையடுத்து நேற்று முன்தினம் இளைஞன் கைதானார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



