Pagetamil
இலங்கை

மன்னாரில் 3 கிறிஸ்தவ சிற்றாலயங்கள் மீது தாக்குதல்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று புதன் கிழமை (14) அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடு உடைந்து சேதமாகி உள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் மற்றும் ‘சோகோ’ பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் கடந்த திங்கம் மற்றும் செவ்வாய் கிழமை அதிகாலை மேலும் மூன்று சிற்றாலங்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி அதிகரிப்பு

east tamil

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்

east tamil

சமஷ்டி ஆட்சி அமைத்தால் நாடு அபிவிருத்தி அடையும் – சிறிநேசன் எம்.பி

east tamil

பிரித்தானியாவின் இந்து பசிபிக் வலயத்துக்கான அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

east tamil

பேர வாவி பறவைகள் உயிரிழப்புக்கு விசம் காரணம்?

Pagetamil

Leave a Comment